சேலத்தில் சீமான் திடீர் கைது

சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிராக பேசிய சீமான் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் சீமான், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சீமானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதன்படி, சேலத்தில் ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, முன் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக சீமானை காவல்துறை கைது செய்து மல்லூர் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Leave a Response