
சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் மக்களின் கேள்விக்கு பதிலளிப்பதாக கூறியிருந்தார். வணக்கம்டுவிட்டர் தொடர்பான நிகழ்ச்சிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று மீண்டும் மக்களின் கேள்விக்கு பதிலளிப்பதாக டுவிட்டரில் கமல் தெரிவித்தார். பிக்பாஸ் 2 படப்பிடிப்புக்கு இடையே நான் உங்களின் கேள்விக்கு பதிலளிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அப்போது நான்சி என்பவர், அடுத்த தலைமுறையிடம் ஜாதி, மதத்தை ஒழிக்க என்ன செய்ய போகிறீர்கள், பள்ளி, கல்லூரிகளில் அது கட்டாயம் இருக்குமா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த கமல், “எனது இரு மகள்களை பள்ளியில் சேர்த்தபோதே ஜாதி, மதத்தை குறிப்பிட மறுத்துவிட்டேன். இது அப்படியே அடுத்த தலைமுறைக்கும் போகும். ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி இது தான். இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும், கேரளா இதை அமல்படுத்திவிட்டது. நிச்சயம் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என கூறியுள்ளார்.
இதற்கு கடும் விமர்சனங்கள் வருகின்றன.
அரசியல் அறிவோ புரிதலோ இல்லாமல் கமல் பேசியிருக்கிறார் என்றும்,
பள்ளிக்கூடத்தில் ஜாதி இல்லையென்றால் சமூகத்தில் ஜாதியே இல்லாமல் போய்விடுமா?
அதன்பின், யாரும் ஜாதி பார்த்து கல்யாணம் பண்ண மாட்டார்களா?
சான்றிதழில் ஜாதி இல்லாததால யாருக்கும் யார் ஜாதியும் தெரியாது. அப்புறமா, கோவிலில் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகிவிடலாமா?
போன்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.


