கோவையில் பாஜகவினர் என்னைக் கொல்ல முயன்றனர் – இயக்குநர் அமீர் பகிரங்க குற்றச்சாட்டு

ஜூன் 8 அன்று கோவையில் நடந்த புதியதலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ் நாளில் தன்னைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாக இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

பாஜகவினரே தன்னைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை தலைமை அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். நந்தகுமார் என்கிற பாஜக பொறுப்பாளர் உட்பட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அவர் வந்த வாகனத்தைத் தாக்கியதோடு அவரையும் தாக்க முயன்றதாகவும் அவர்களையெல்லாம் அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புகார் கொடுக்கப் போனபோது இயக்குநர் அமீருடன் இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், டிராபிக் ராமசாமி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

Leave a Response