தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – நடிகர் ரஜினி கருத்து

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டகாரர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது காவல்துறை தடியடி நடத்தியதால் பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர்.

இதனால் காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன்(55), தாமோதர் நகர் பகுதியில் வசிக்கும் மணிராஜ், குறுக்குசாலையை சேர்ந்த தமிழரசன்(28), ஆசிரியர் காலணியை சேர்ந்த சண்முகம்(40), மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன்(40), தூத்துக்குடியை சேர்ந்த கந்தையா(55) ரயில்வே காலனிபகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா உள்பட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என கூறி உள்ளார்.

Leave a Response