
பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி தலைவர் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 15.1 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், சகால், அலி, டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் பார்தீவ் பட்டேல்-விராட் கோஹ்லி ஜோடி சிறப்பாக ஆடி 8.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இதன்மூலம் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. விராட் கோஹ்லி 48 ரன்களுடனும், பார்தீவ் பட்டேல் 40 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


