ஐபிஎல் – பட்லர் அதிரடியில் ராஜஸ்தானிடம் தோற்றது சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ். மைதானத்தில் மே 11 அன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. சிறப்பாக விளையாடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 52 ஓட்டங்களை விளாசினார், தோனி 33 ஓட்டங்கள் எடுத்தார்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்டோக்ஸ் 11, அணித்தலைவர் ரஹானே 4, சாம்சன் 21, சோப்ரா 8 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் அரைசதம் விளாசினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி அடையச் செய்தார்.

Leave a Response