நீட் தேர்வால் நான்காவது உயிர் பலி – மக்கள் அச்சம்

கடந்த 26.04.2018 அன்று, சேலம் தமிழ்ச் சங்க சாலையைச் சேர்ந்த மாணவர் கெவின்ஹரி என்பவர், நீட் தேர்வுக்குப் பயின்றுவந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

01.05.2018 அன்று, “நீட்” தேர்வுக்குப் படித்து வந்த புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 17 அகவை மாணவி சிவசங்கிரி, “நீட்” தேர்வு மன உளைச்சலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை திருத்துறைப்பூண்டி விலக்குடி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி பலியானார்.

மாலையில் நீட் தேர்வு எழுத மகளை அழைத்துச் சென்றவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை பசுமலை மையத்துக்கு சென்று திரும்பும் போது கண்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே மூவர், இப்போது நான்காவதாக ஓர் உயிர் போயிருக்கிறது.

நீட் அரக்கன் இன்னும் எவ்வளவு பலி கேட்கப் போகிறானோ என்கிற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

Leave a Response