பெங்களூரு பாஜக வேட்பாளர் திடீர் மரணம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜய்குமாரும் (வயது 60) வழக்கம் போல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று (மே 3 ) மாலை தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அவர் திருமணமாகாதவர். அதே தொகுதியின் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரான அவர் மக்கள் செல்வாக்கு பெற்றவர் எனவே அவரை கட்சி மேலிடம் மீண்டும் வேட்பாளராக அறிவித்தது.

Leave a Response