
இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான்,தமிமுன் அன்சாரி,மணியரசன்,தனியரசு ஆகியோரை பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமணமண்டபத்தில் அடைத்து வைத்திருந்தார்கள்.
மோடி தில்லி திரும்பியவுடன் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதற்கு மாறாக சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது சீமான் மீது போடப்பட்ட கொலைமுயற்சி வழக்கில் அவரைக் கைது செய்ய காவல்துறை குவிப்பு.
மண்டபத்தை விட்டு வெளியே வந்தால் அவரைப் பிடிக்க முடியாது என்பதால் மண்டபத்தினுள்ளேயே கைது செய்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.


