புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்துப் போட்டுவிட்டனர்.
இதற்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
திரிபுராவில் லெனின் சிலையை அகற்றுவதை ஊக்குவித்த பா.ஜ., ஆர்எஸ்எஸ்.,,தற்போது, தங்களது கொள்கைகளுக்கு எதிராக உள்ள, பெரியார் போன்ற தலைவர்களின் சிலையை அகற்றுமாறு தொண்டர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளது. பெரிய சீர்திருத்தவாதி, தலித் உரிமைகளுக்கு போராடிய பெரியாரின் சிலை தமிழகத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.