காதலர் தினத்தை உற்சாகப்படுத்த வரும் சிம்பு-சிவகார்த்திகேயன் படங்கள்..!


கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இந்தப் படம் சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது

அதுபோல், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த படம் ‘ரெமொ’. இந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

இவ்விரு படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. இது செய்தி சிம்பு ரசிகர்களையும், சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

Leave a Response