கலகலப்பாகத் தொடங்கிய களவாணிமாப்பிள்ளை

அட்டகத்தி தினேஷ் நாயகனாகவும் அதிதி மேனன் நாயகியாகவும் நடிக்கும் புதியபடம்
களவாணி மாப்பிள்ளை.

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 வெற்றிப் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்துப் படங்களையும் இயக்கியவர். அந்தக் கால கட்டத்தில் வணிக ரீதியாக வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப்பட்டவர் மணி வாசகம்.

அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த்

படப்பிடிப்பு பிப்ரவரி 15 ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க உள்ளது.

காதலும் நகைச்சுவையும் கலந்து எல்லாத்தரப்பு மக்களுக்கும் ரசிக்கிற படமாக இப்படம் உருவாகும் என்கிறார் இயக்குநர் காந்தி மணிவாசகம்.

Leave a Response