சூப்பர்குட் பிலிம்ஸுக்கு நன்றிக்கடன் தீர்க்கும் விஜய்..!


ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் ‘பூவே உனக்காக’, ‘லவ் டூடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவையெல்லாம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்.. விஜய்யின் வளர்ச்சிக்கு உதவிய படங்கள்.

இந்த நிலையில், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் விரைவில் தங்களுடைய 100-வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. தங்களுடைய 100-வது தயாரிப்பில் நடிக்க நடிகர் விஜய்யை அணுகியுள்ளதாகவும், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியிருக்கிறார் இந்தப் படத்திற்காக கதை கேட்கும் படலம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response