பஸ் கட்டண உயர்வுக்காகப் போராடிய மாணவர்கள் மீது எவ்வளவு வழக்குகள் தெரியுமா?

இந்திய மாணவர் சங்கம் (SFI)
தமிழ்நாடு மாநிலக்குழு

போராடும் மாணவர்கள் மீது வன்முறையை பிரோயோகிக்கும் காவல்துறையின் அத்துமீறலை தமிழக அரசே தடுத்து நிறுத்து. பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்திடு.

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

    தமிழக அரசின் வரலாறுகானாத திடீர் பேருந்து கட்டண உயர்வினால் தமிழகத்தின் அனைத்து பகுதி மாணவர்களையும், பொதுமக்களையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இவ்வறிப்பு வந்த ஜனவரி 2௦ முதல் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தி வரும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களை தமிழக காவல்துறையினர் திட்டமிட்டு தாக்கியும் கைது செய்தும் வருகிறது.

    விருதுநகர் இராஜபாளையத்தில் மாவட்டத் துணைத்தலைவர் மாடசாமி மற்றும் ஜோதீஸ்வரன் மீது 147, 188, 341, 294(6), 506(2), 109 IPC பிரிவின் கீழ் கைது செய்து கடுமையாக தாக்கி சிறையில் அடைத்துள்ளனர்.

    கோவையில் மாவட்டதலைவர் தினேஷ், கோகுல், சஞ்சய், மணிகண்டன், கோகுல் மற்றும் கிஷோர் ஆகிய ஆறு தோழர்கள் மீது 341, 143, 188 IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தஞ்சையில் மாவட்டச் செயலாளர் அரவிந்த்சாமி, சசிக்குமார் ஆக்கிய இருவரையும் கடுமையாக தாக்கி கடந்த ஐந்து நாட்களாக சிறையில் அடைத்துள்ளனர்.

    நாகப்பட்டினத்தில் மாவட்டச் செயலாளர் மாரியப்பன், மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, விஜேந்திரன், அமுல்ராஜ், அன்புராஜ், சிவி, ரமேஷ், ராகேஷ், ராஜ், அன்பு செல்வன், செந்தில், கண்ணதாசன் மற்றும் சிவமுகிலன் ஆகிய  13 பேர் மீது 143, 341, 7(1) CAL ACT போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ராகேஷ் மற்றும் ராஜ் ஆகிய இருவரும் கடந்த ஐந்து நாட்களாக சிறையில் அடைத்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, வீர கருப்பையா உள்ளிட்டு 19 தோழர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் திருமலை நம்பி, சிவா ஆகியோர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் வேல் தேவா, செல்வா, முரளி, பிரபு, பிரேம், விக்னேஷ் குமார், செல்வ கணபதி, மனோஜ்குமார், ஜெயக்குமார் மற்றும் ராஜ்குமார் மீது 143, 188, 7(1) (a) உள்ளிட்ட பிருவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாலமுருகன், மணிகண்டன், பூமிநாதன், விக்னேஸ்வரன், கோகுல், விஸ்வா, அஸ்வின் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து மைனர் என்பதால் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.

கைது செயப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல்இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைத்து மறுநாள் சிறைபடுத்தியது சட்டத்திற்கு புறப்பானதகும். மேலும் போலிஸ் வாகனத்தில் வைத்து நாள் முழுவதும் அளக்களிக்கச் செய்வது, கடுமையாக தாக்குவது, மோசமான கெட்ட வார்த்தைகளால் தரக் குறைவாக திட்டுவது போன்ற மனிதாபிமானமற்ற செயலில் தமிழக காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல் காவல்துறையை கொண்டு காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்வதை கைவிட வேண்டும். பொய்வழக்கு போடப்பட்ட அனைத்து மாணவர்கள் மீதும் வழக்கை திரும்பப் பெற்று விடுதலை செய்ய வேண்டும். மேலும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுவதோடு அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ்பாசை உறுதிசெய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response