அரசியல் ஆதாயத்துக்காக சின்னவிசயத்தை பெரிதாக்குவதா? – இராமதாசுக்கு அமைச்சர் கேள்வி

திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் தற்கொலை வழக்கில் சிக்கி இதுவரை வெளியே தலைக்காட்டாமல் இருந்த பைனான்சியர் அன்புச்செழியன், இரு தினங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரன்கள் காது குத்து விழாவில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: அவர் (அன்புச்செழியன்) என்னோட விழாவில் கலந்து கொண்டா என்ன தப்பு?. முதல்வரை சந்தித்தால் என்ன தவறு?. அவர் என்ன தேடப்படும் குற்றவாளியா?. பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பிரச்சினை ஏற்பட்டது. அதை அவர் சட்டரீதியாக சந்தித்து வருகிறார். அப்படியிருக்கும்போது அவர் என்னோட விழாவில் கலந்து கொண்டதை சர்ச்சையாக்குவது தேவையில்லாதது. சினிமா துறையினரே அவரை நல்லவர் என்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விஷயத்தை பெரிதாக்குகின்றனர் என்றார்.

இந்த விழாவில் அன்புச்செழியன் கலந்து கொண்டது பற்றி மருத்துவர் இராமதாசு ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response