ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்-விமர்சனம்

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரை விமர்சனம்!!

விஜய்சேதுபதி படம் என்றால் ஒரு யதார்த்தம் இருக்கும்னு இதுவரை நம்பப்பட்டது. ஆனால் அந்த யதார்தத்தையே நடிப்பாக்கி இருக்கார் விஜய் சேதுபதி… இது சற்று ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கு. விஜய்சேதுபதியை அனைவருக்கும் பிடிக்க வைத்ததே அவரின் யதார்த்தம் தான் … ஆனால் மக்களின் அதையையே நடிப்பாக்கி காட்டி இருக்கும் கலைஞர் ஆகிவிட்டாரா அவர் என்று சற்று ஏமாற்றம் தான்

குழந்தைகள், பெண்களுக்கு எதுவும் ஆகாமல், யாரையும் அடிக்காமல், அரசியல் பண்ணாமல் நேர் வழியில் திருடும் தொழில் செய்பவர் விஜய் சேதுபதி.

திருடவந்த இடத்தில் கல்லூரி மாணவி நிஹாரிக்கா கோனிடெல்லாவை சந்திக்கிறார். பிறகு திருட்டை மறந்து நிஹாரிகா பின்னாலேயே சுற்றுபவர், அவரை எமசிங்கபுரத்துக்கு கடத்திச்செல்ல முயல்கிறார். இதற்கிடையில் அதே கல்லூரியில் படிக்கும் கௌதம் கார்த்திக்கும் நிஹாரிக்காவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். அந்த சமயத்தில் நிஹாரிக்காவை விஜய்சேதுபதி எமசிங்கபுரத்துககு கடத்திச்சென்று விடுகிறார்.

தங்கள் கொள்ளைக் கூட்ட கொள்கை கோட்பாடுகளைத் தாண்டி நிகாரிகாவை தூக்க காரணம் என்ன…? நிஹாரிக்கா விஜய்சேதுபதியின் அக்கா மகள் , சிறு வயதிலேயே விஜய்சேதுபதிக்கு நிச்சயிக்கப்பட்டவர் .. அவ்வளவு தான் கதையே… இதை கதை என்றும் சொல்லலாம்.

“சாமி முன்னாடி செய்த சத்தியத்திற்காக என்னை புடிக்காத பெண்ணை கட்டுறதை விட, என்னை புடிச்ச பெண்ணை கட்டுறதுல தான் என் வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும்.” என தன் அம்மாவிடம் ஆறுதல் கூறிய விஜய்சேதுபதி காயத்ரியை கரம் பிடிக்கிறார்.

“எவ்வளவு அடி வாங்கினாலும் திரும்ப வர்றீயே… நீ ஹீரோ தான்…” என கெளதமை பார்த்து சொல்லும்போது தான் கெளதம் கார்த்திக் வீணாக்கப்பட்டிருக்கிறார் என்பதே நமக்கு புரியுது.

“எல்லா பொண்ணுங்களை மாதிரியும் நீயும் முட்டாள்தனமா யோசிக்காதே… “என நாயகியிடம் கொதிப்பதில் தொடங்கி போலீஸிடம் அடி வாங்கும் போது, வலியில்,”6 வயதிலேயே ஸ்கவுட் அவார்டு ராஷ்டிரபதி கையால வாங்கினவன்.. நான்…. ” என பெருமை பொங்க கதறுவது வரை கெளதம் காமெடியனாக தான் வந்திருக்கார்.

மொத்தத்தில் கதையே இல்லாமல் மொத்த படத்திலும் கதை பண்ணியிருப்பது பெரும் பலவீனம் தான்.

‘என்னடா ஜட்டியில பொம்மை’ என தெறிக்க விடும் போலீஸ் ஸ்டேஷன் காமெடி மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் அளவு இருக்கு.

– பிரியாகுருநாதன்

Leave a Response