சிவகார்த்தியேன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் பகத் பாசில், நயன்தாரா, சினேகா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் சினேகா அளித்த பேட்டி ஒன்றில், ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். அப்போது ‘‘என்னுடைய காட்சிகள் மொத்தம் 18 நாட்கள் படமாக்கப்பட்டது. என்னுடைய கேரக்டருக்காக நான் 7 கிலோ உடலை குறைத்தேன். ஆனால் படத்தில் என்னுடைய காட்சி வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது’’ என்று தனது விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இது இயக்குனர் மோகன்ராஜாவின் கவனத்துக்கும் சென்றது. ‘வேலைக்காரன்’ படத்தில் சினேகா நடித்திருக்கும் காட்சிகள், படத்தின் நீளம் கருதி துண்டிக்கப்பட்டதாக விளக்கம் கூறியுள்ளார் மோகன்ராஜா. இருந்தபோதிலும் வேலைக்காரன் படத்தில் சினேகாவின் கேரக்டர் பிரபலமாகி மிகவும் பேசப்பட்டு வருவதாக கூறினார். ஏனென்றால் சினேகாவின் கேரக்டர் படத்தில் அவ்வளவு முக்கியமானது. இருந்தாலும் நான் தவறு செய்திருப்பதாக சினேகா கருதினால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார் மோகன்ராஜா