
நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.. இந்தப் படம் தற்போது வெளியாவதற்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து ஜெயம் ரவி, கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ‘அடங்க மறு’ என்ற படத்தில் நடிக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25வது படத்தை, அவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்க இருக்கிறார். அதற்கடுத்து ஜெயம் ரவியின் 26வது படத்தை . என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஹமது இயக்கவுள்ளார். இந்தப் படம் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘பேபி’ ஹிந்திப் படத்தின் ரீமேக் ஆகும்.


