வேலைக்காரன் படத்தயாரிப்பாளரின் மானுடநேயம் – பேராசிரியர் ராஜநாயகம் புகழாரம்

டிசம்பர்22 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வேலைக்காரன். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பற்றி பேராசிரியர் ச.ராஜநாயகம் எழுதியுள்ள குறிப்பிடத்தக்க பதிவு….

வேலைக்காரனாய்ச் சிந்திக்கும் தயாரிப்பாளர்…!

ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் எத்தகைய கதைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்கு “24AM” ஆர்.டி.ராஜா ஓர் உரைகல்.

கமர்ஷியல் சினிமாவில் வேலைக்காரன் மாதிரியான பெரிய ரிஸ்க் எடுப்பதற்கு ஒரு அசாத்தியமான துணிச்சலும் அபரிமிதமான தன்னம்பிக்கையும் வேண்டும். அதைவிட இந்த சமூகத்தின் மீது அக்கறையும் மானுடத்தின் மீது அன்பும் வேண்டும்.

கல்லூரி மாணவராக ஆர்.டி. ராஜா இருந்த நாள்களிலேயே அவரது இந்த சமூக அக்கறையும் மனித நேயமும்தான் என் கவனத்தை வெகுவாக ஈர்த்தவை. “வேட்கை” என்ற குழுவாக செயல்பட்ட நாட்கள் அவை…

தான் முன்னெடுக்கும் எந்த ப்ராஜெக்ட்-உம் செய்நேர்த்தியும் தனித்துவமும் கொண்டிருக்க வேண்டும் என்பதில் அவருக்குள்ள உறுதி பாராட்டுக்குரியது.

கல்லூரியில் அவருக்கு “ஃபாதர்” என அறிமுகமான காலம் தொட்டு, ஒரு சிறந்த தயாரிப்பாளராக அவர் உயர்ந்துள்ள இப்போது வரை, நல்லது கெட்டது எல்லாவற்றிலும் “தந்தை” என்ற அந்தஸ்தில் என்னை வைத்திருப்பவர்… நான் பெறாமல் பெற்ற பிள்ளை!

ஆர்.டி. ராஜா. ‘முதலாளி”யானாலும் வேலைக்காரனாகச் சிந்திப்பவர். அவருக்கும் அவர் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
—————————

இயக்குநர் மோகன் ராஜாவின் தனி ஒருவன் படத்தை, என் மாணவர் ஜெயம் ரவி நடித்து அவர் அண்ணன் இயக்கிய படமாகக் கருதி அதைப் பார்க்கச் சென்றேன். வேலைக்காரன் படத்தையோ, இயக்குநர் மோகன் ராஜா இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள படமாகக் கருதி அதைப் பார்த்தேன்…

முதல் படம் action-packed என்றால், இரண்டாவது படம் idea-packed.
அடுத்த படம் பெரிய சவாலாக அமையப்போவது நிச்சயம். அதை வெற்றிகரமாய்ச் சந்திக்கும் திறமை அவருக்கு உண்டு.
இயக்குநருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்…
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response