இன்னும் எவ்வளவு வாக்குகள் பெற்றிருந்தால் திமுகவுக்கு டெபாசிட் கிடைத்திருக்கும் தெரியுமா?

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர், சிம்லா முத்துசோழன், 57 ஆயிரத்து, 673 வாக்குகள் பெற்றார். ஜெ க்கு எதிராக இந்த வாக்குகளைப் பெற்றார். தற்போது நடந்த இடைத்தேர்தலில், ஜெ மறைவு அ.தி.மு.க வில் பிளவு, ஆட்சி மீது அதிருப்தி போன்ற காரணங்களால், எளிதாக வெற்றி பெற்று விடலாம் எனப் பல்ரும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

ஆனால், கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைக் கூட தி.மு.க பெறவில்லை. இந்தத் தேர்தலில், 24 ஆயிரத்து, 651 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிடுவதற்கான வைப்புத்தொகையாக பத்தாயிரம் ரூபாய் கட்டவேண்டும். பதிவாகும் வாக்குகளில், ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றால் அவர்களுக்கு வைப்புத்தொகை திரும்பத்தரப்படும்.

ஆர்கேநகரில் பதிவான வாக்குகள் 1,76,890. அந்த வகையில் வைப்புத்தொகையைத் திரும்பப்பெற 29 ஆயிரத்து, 481 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். திமுகவின் வேட்பாளர் என்.மருதுகணேஷ் பெற்றது 24,651. தேவைக்கு 4830 வாக்குகள் குறைவு. இதனால் தி.மு.க. வைப்புத்தொகையை இழந்தது.

தி.மு.க. ஓட்டுகள்,வேறு கட்சிக்கு போகாது என்கிற பேச்சு எப்போதும் உண்டு. இம்முறை திமுக ஓட்டுகள் தினகரனுக்குச் சென்றுள்ளன. தினகரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க.வினர் மாற்றி ஓட்டு போட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response