
கொம்பன் படத்துக்கு, புதியதமிழகம்கிருஷ்ணசாமி, நாடார்அமைப்புகள் ஆகியன பல்வேறு தடைகளை ஏற்படுத்தின அவற்றைத்தாண்டி அந்தப்படம் வெளியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி மாலையே படம் வெளியிடப்பட்டுவிட்டதாம். இராமநாதபுரம்மாவட்டத்தில் மட்டும் இரண்டாம்தேதிகாலையில் வெளியிடுங்கள் என்று மாவட்டநிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப்படத்துக்குச் சட்டரீதியாகத் தடைவாங்க முயன்று அதில் வெல்லமுடியாததால் அடுத்து திரையரங்குகள் பக்கம் கவனத்தைத் திருப்பியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் பல திரையரங்குகள் இந்தப்படத்துக்கு ஒத்துழைப்புத்தரவில்லையாம்.
சென்னையில் புகழ்பெற்ற சத்யம் திரையரங்கவளாகமும் இந்தப்படத்துக்கு ஒத்துழைப்புத்தரவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்தவளாகத்தின் மையமான சத்யம் திரையரங்கில் இந்தப்படத்துக்கு இடம்இல்லையென்று சொல்லிவிட்டார்களாம். அதுமட்டுமின்றி இந்த வளாகத்தின் முன்வாயில் பின்வாயில் ஆகிய இரண்டுபக்கங்களிலும் பிரமாண்டமான விளம்பரப்பதாகை வைக்க அனுமதிவழங்கப்படும். அந்தஇடத்தில் தங்களுடைய படத்தின் விளம்பரம் வருவதை படநிறுவனங்கள் பெருமையாகக் கருதும். அந்தஇடத்தில் பெரியநிறுவனங்கள்தாம் விளம்பரப்பதாகை வைக்கமுடியும், ஏனெனில் அதற்கு பெரும்தொகை கொடுத்தாகவேண்டுமாம். அப்படிப்பட்ட இடத்தில் கொம்பன் படத்துக்கு இடம் தராமல் ஏற்கெனவே அந்தஇடத்தில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டார்களாம். இப்போது அந்தஇடத்தில் பார்த்தால் ஒருபக்கம் உதயநிதியின் நண்பேன்டா படவிளம்பரம், இன்னொருபக்கம் விஜயகாந்தின் மகன் நடித்திருக்கும் சகாப்தம் படவிளம்பரம் இடம்பெற்றிருக்கிறதாம்.

உதயநிதியாகவது பல பெரியபடங்களைத் தயாரித்தவர், ஆனால் விஜயகாந்தின் மகன் படத்துக்கு இடம்கொடுத்திருப்பது அந்தத் திரையரங்கவளாகத்தின் மீது இதுவரை பலரும் எழுப்பிய சந்தேகங்களை உறுதிசெய்கிறது. தற்போதைய ஆளும்கட்சிக்கு ஆதரவான திரையரங்கவளாகம் என்று சொல்லப்படுகிற அந்த வளாகத்தில் விஜயகாந்த் மகன் படத்துக்கு இடம் கிடைக்கிறது. ஆனால் கொம்பன் படத்துக்குக் கிடைக்கவில்லை என்பது திரையுலகினர் மத்தியில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
சத்யம்போன்ற பொதுவான திரையரங்குக்காரர்கள் இம்மாதிரி திரைப்படநிறுவனங்களுக்குப் பாகுபாடுகள் பார்ப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென்று தி¬ப்படத்தயாரிப்பாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. அனைவருக்கும் பொதுவாகச் செயல்படவேண்டியவர்கள் இப்படி ஒருபக்கமாகச் சாய்ந்தால் சிக்கலைச் சந்திப்பதைத் தவிர வேறுவழியில்லை என்று சொல்கிறார்கள்.
