விக்ரம் மகன் நடிக்கும் படம் ‘வர்மா’..!


பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்திற்கு ‘வர்மா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்தில் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இதை இயக்குநர் பாலா இயக்க உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கு தற்போது ‘வர்மா’ என்ற தலைப்பிடபட்டுள்ளது.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்தப் படத்தில், ஸ்ரேயா சர்மா ஹீரோயினாக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மற்ற கலைஞர்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும், ஜனவரி மாதம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response