விஜய்சேதுபதி விளம்பரப்படங்களில் நடிப்பது ஏன் தெரியுமா..?


விளம்பரப்படத்தில் நடிக்கத நடிகராக இருந்த விஜய்சேதுபதியும் இப்போது விளம்பரப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் மற்றவர்களைப்போல இன்னும் வருமானம் சேர்க்கவேண்டும் என்பது மட்டும் காரணம் அல்ல.. அதற்கான காரணத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி விஜய்சேதுபதி பேசுகையில், நான் விளம்பரப் படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தோ்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரம் மூலம் எனக்கு கிடைத்த சம்பளத் தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூா் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரமும், தமிழ் நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்ற்றோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சமும் வழங்க உள்ளேன்.

மேலும், 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும் வழங்க உள்ளேன். அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் ஹெலன் கெல்லா் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தமாக ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் வழங்க உள்ளேன். இந்த தொகையை அரியலூா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்..

Leave a Response