தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 160 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது. வீட்டுக்குள் தினகரன் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நுழைந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை அருளானந்த நகரில் உள்ள சசிகலா கணவர் நடராஜன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.
போயஸ் கார்டனிலுள்ள ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.
மன்னார்குடியில் திவாகரன் உதவியாளரான முன்னாள் கவுன்சிலர் ராசுபிள்ளை வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. திவாகரன் ஆதரவாளர்கள் வடுவூர் அக்ரி ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
மன்னார்குடியில் தினகரன் அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிலும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் சசிகலா தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கும் பெரும்பாலானோர் வீடுகளில் சோதனை நடப்பதால், இது பாஜகவின் அப்பட்டமான மிரட்டல் நடவடிக்கை என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.