பிக்பாஸ் மீது பெண்ரசிகர்கள் கடும் அதிருப்தி, ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி (செப்டம்பர் 30) இன்று நடைபெறவுள்ளது.

தொடக்கத்தில் ஒவ்வொரு வாரமும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், நமீதா,ஓவியா, ஜூலி,ரைசா, காயத்ரிரகுராம், பிந்துமாதவி, காஜல்பசுபதி, சுஜா,ஆர்த்தி உள்ளிட்ட பெண்களால் பரபரப்பாக இருந்தது. ஓவியாவும் காயத்ரியும் இன்றுவரை அதன் அடையாளமாகவே பார்க்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் சிநேகன், பிந்துமாதவி, ஹரிஷ், ஆரவ் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் இருந்தனர்.

நான்கு ஆண்கள் போட்டியில் இருந்தாலும் ஒரு பெண்ணும் அந்தப்போட்டியில் இருக்கிறார் என்கிற ஆறுதல் பெண்ரசிகர்களிடம் இருந்தது.ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பிந்துமாதவி பிக் பாஸ் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோரில் ஒருவர் வெற்றியாளர் என்பது உறுதியாகியுள்ளது.
பெண்களால் பிரபலமான ஒரு நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியிலிருந்த ஒரே பெண்ணையும் அனுப்பியதால் பெண்ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Leave a Response