கமல் முதல்வராவேன் என்று சொன்னதற்கு ஓவியாதான் காரணம் – எழுத்தாளர் அதிரடி

‪ஓவியாவால், பிக்பாஸ் அபரிமிதமாகப் பிரபலமானதைத் தம்மால் என தவறாக எண்ணிக் கொண்டதால் அவருக்கு மதப்பு கூடி சமூகப் பணியாற்ற அரசியலுக்கு வரக்கூடும் என கண்ணடித்து சமிக்ஞை விட்டுப் பார்த்தார்.

தனக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு வாரா வாரம் வளர்ந்துகொண்டே செல்வதைக் கவனித்த ஓவியா, இங்கே அவஸ்த்தைப் பட்டுக்கொண்டு இருப்பதைவிட வெளியே செல்வதால் அது இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது என கணித்து, பிடிவாதமாய் வெளியே போனார். திரும்ப வந்தால் கூடக் கிடைக்கிற சம்பளத்தைவிட திரும்ப வராதிருந்தால் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து நிறைய சம்பாதிக்கலாம் என்பதே யதார்த்தக் கணக்கு.

ஓவியா ஒரேயடியாய் போனபின் பிக்பாஸ் தொங்கத் தொடங்கிற்று. விளம்பரங்கள் குறையத் தொடங்கின. விஜய் டிவி நிகழ்ச்சியின் விளம்பரங்களையே வெளியிட்டு விளம்பர நேரத்தை நிரப்ப வேண்டியதாயிற்று.

வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் இரட்டை அர்த்த அரசியல் பேசி விளம்பர வருவாயைக் கெடுத்ததற்கு பிராயச்சித்தமாய் ஏதாவது செய் என்ற பிக்பாஸின் கட்டளைப்படி முதலமைச்சர் ஆகிறேன் என்கிற பிட்டைப் போட்டார் கமல்.

ஓவியா போனபின் பிக்பாஸை கண்டுகொள்ளாமல் இருந்த பேஸ்புக் மகாஜனம் உட்பட ஊரே இப்போது கமலை கழுவி ஊற்றத் தொடங்கியதில் பிக்பாஸ் ஷோவுக்குத் திரும்ப விளம்பரங்கள் குவியத் தொடங்கிவிட்டன. கமல் பெரியார் தமக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை செவ்வனே நிறைவேற்றிவிட்டார்.

எல்லாரும் போய் சந்தோஷமா லாலிபாப் சாப்பிடுங்க. அடுத்து மகிழ்ச்சி படம் காட்டுவான் காலானு கதறிக்கிட்டே கால்ல விழுங்க.

பொழப்பப் பாருங்கடே அவனவன் கண்ணுங் கருத்துமா பொழக்கிறதைப் பாத்துக்கிட்டிருக்கான். அவன் பொழைக்கிறதை நீங்க பாத்துக்கிட்டிருக்கீங்க.

– விமலாதித்தமாமல்லன்

Leave a Response