
கடந்த 2014ல் இந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸை அடித்து நொறுக்கிய படம் தான் குயீன். அனுராக் காஷ்யப் தயாரித்த இந்தப்படத்தில் கங்கனா ரணவத் கதாநாயகியாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட பனிரெண்டரை கோடியில் தயாராகிய இந்தப்படம் 97கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற பலத்த போட்டி நிலவி வந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அந்த விஷயம் அப்படியே சைலன்ட் ஆனது..
இந்தநிலையில் தான் இந்தப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்க, கதாநாயகியாக அதாவது ‘குயீன்’ ஆக நடிக்கிறார் காஜல் அகர்வால்.. இந்தப்படத்திற்கு ‘பாரிஸ் பாரிஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக சசி வருண் என்பவர் இதில் அறிமுகமாகிறார். இந்தப்படத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியன் வசனம் எழுதுகிறார்
