
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பற்றி சமூக வலைதளங்களில் நிறைய வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
பிக்பாஸ் வீட்டில் நல்லவர்களின் பிரதிநிதிபோல் ஓவியாவையும் கெட்டவர்களின் பிரதிநிதிபோல் காயத்ரிரகுராமையும் சித்தரித்துவிட்டார்கள்.
ஓவியா,காயத்ரிரகுராம் ஆகிய இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்துவிட்டாலும் அவர்களைப் பற்றிய சித்தரிப்புகள் அப்படியே இருக்கின்றன. இது சமூகவலைதளங்களில் எதிரொல்லிக்கிறது.
ஓவியாவின் டிவிட்டர் பக்கத்தில் அவரைப் புகழ்ந்து எழுதுகிறார்கள். காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கத்தில் அவரை வசைபாடுகிறார்கள். பலநாட்கள் பொறுத்த அவர் இன்று குமுறிவிட்டார். வரிசையாகப் பல ட்வீட்களைப் போட்டு,தன்னை வசைபாடியவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர், உங்களது எதிர்மறைக் கருத்துகளை நான் நீக்கமாட்டேன். நான் என் முகத்திரையை உங்கள் அனைவரின் முன்னிலையிலும் நீக்கி நான் யார் என்பதைக் காட்டிவிட்டேன். நீங்கள் தற்போது உங்கள் முகத்திரையை விலக்கி உங்கள் எதிர்மறைப் பகுதிகளைப் பாருங்கள்.
எதிரிலோ,பின்னாலோ பேசுவதற்குரிய சுதந்திர உலகம் இது, இதில் உணர்வுகளை பகிரலாம், மீம் விமர்சனங்களை வைக்கலாம். மகிழ்ச்சியுடன் இதனைச் செய்யுங்கள். நான் யாருக்கும் அறிவுரை வழங்குவதில்லை, நான் என்ன உணர்கிறேனோ அதைத்தான் கூறுகிறேன். போரில் அனைத்துமே நியாயம்தான். கேம் என்பது கேம்தான்.
என் ட்வீட்களினால் எரிச்சலடைபவர்கள் என்னைப் பின் தொடர வேண்டாம். உங்களுக்குப் பிடித்தவர்களை, உங்கள் ரோல் மாடல்களை பின் தொடருங்கள். எனக்கு கோபமோ வெறுப்போ இல்லை. எனக்கு எதிரான வசைகளால் எனக்கு வருத்தம் உண்டாகிறது, என் மீது அவர்கள் நேரத்தை வீணாக செலவழித்து வருகின்றனர்.
நாம் எல்லோரும் எவ்வளவு வெட்டி என்பது இதிலிருந்து தெரிகிறது. அதாவது உங்களுக்குப் பிடிக்காத நபர் மீது உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்கிறேன். கிண்டல், கேலி, வசைகள் ஒரு போதும் முடியப் போவதில்லை.
இப்படியே தொடர்கிறது காயத்ரியின் ட்வீட்கள். ஆனாலும் அவரை விட்டபாடில்லை, அவரை விமர்சித்து நிறைய எழுதுகிறார்கள்.


