முருகன் வழிபாடு இந்த மண்ணுக்குத் தேவை- சத்யராஜ் பேச்சு

நாம்தமிழர்கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமானை ஆசிரியராகக்கொண்ட எங்கள்தேசம் மாதமிருமுறை ஏட்டின் தொடக்கவிழா மார்ச்13 அன்று நடைபெற்றது. முதல்இதழை நடிகர் சத்யராஜ் வெளியிட எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.
இதழைப்பெற்றுக்கொண்டு உரையாற்றிய ச,இராமகிருட்டிணன், ஒரு பள்ளிவிழாவுக்குப் போயிருந்தேன், அங்கு குழந்தைகள், ஒரு தாளில் எழுதிவைத்துத் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினார்கள். பாடி முடித்ததும் அந்ததாளை கீழேபோட்டுவிட்டார்கள். நான் அதை எடுத்துப்பார்த்தேன். அதில் தமிழ்த்தாய் வாழ்த்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்தப்பள்ளி முதல்வரிடம் இதுபற்றிக்கேட்டபோது, எங்கள் பள்ளியில் தமிழில் பேசினால் தண்டம் விதிப்போம் என்றார். இப்படிப்பட்ட பள்ளிகளைத் தமிழகத்தில் அனுமதித்தது நம் தவறு. தமிழ்நாட்டில் தமிழைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம் இந்நிலையை மாற்றப் போராடும் சீமான் மற்றும் நாம்தமிழர்கட்சியனரை வாழ்த்துகிறேன் என்றார்.
இதழை வெளியிட்டுப் பேசிய சத்யராஜ், நான் கடவுள்இல்லவே இல்லை என்று சொல்கிறவன்தான், ஆனாலும் சீமானின் முருகவழிபாடு இந்த மண்ணுக்குத்தேவை அது வரவேற்கத்தக்கது, வியபாரரீதியாகவும் வெற்றி பெறுகிற வண்ணம் இந்த இதழ் இருக்கிறது. இப்படித்தான் நாம் செயல்படவேண்டும் எங்கள்தேசம் வெற்றி பெறுவதோடு எங்களுக்கான தேசம் அமையவும் வேண்டும் என்றார்.

Leave a Response