இனக்கொலைக்கு ஆளான மக்களுக்கான நீதி தமிழீழம் மட்டுமே.


இந்தியாவை ஆள்வது எந்த அரசானாலும் அது சர்வதேச அரங்கில் இலங்கையின் இனக்கொலைக் குற்றச்சாட்டை மூடிமறைப்பதிலும் பன்னாட்டு விசாரணையிலிருந்து காப்பாற்றுவதிலும் முனைப்போடு உள்ளன. இதன் ஒரு பகுதியாகத்தான் மோதியின் இலங்கைப் பயணம். இந்தியத்தின் இந்நிலைப்பாட்டை மாற்றும் வாய்ப்பு தமிழகத் தமிழர்களாகிய நமக்கு மட்டும்தான் உண்டு. அதேபோல், நமக்கான பதிலைச் சொல்லும் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்குத்தான் உண்டு. சர்வதேச நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவின் சிங்களக்கூட்டை முறிப்பதற்கும் கூட நாம் கால் வைக்க வேண்டிய முதல்படி இலங்கைப் புறக்கணிப்பு முழக்கமே. இதற்கு உயிரூட்டவும் தமிழகத்தில் நரேந்திர மோதியின் இலங்கைப் பயணத்துக்கான எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்யவும் உங்களை அழைக்கிறோம்.
இலங்கையைப் புறக்கணிப்போம் எனும் முழக்கம் தமிழகத்தில் அறுந்துபோகாமல் உயிர்ப்போடு தொடர்கிறது என்பதை நாம் களத்தில் பறைசாற்றுவோம். இந்நூற்றாண்டின் மாபெரும் இனக்கொலைக்கு நீதி பெறுவோம். வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் இனக்கொலைக்கு ஆளான மக்களுக்குமான அந்த நீதி என்பது தனித் தமிழீழமே! இதை நெஞ்சிலேந்தி உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தோழர்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். அதுதான் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும். நம் ஒற்றுமையை உலகுக்குச் சொல்ல முற்றுகைப் போராட்டக் களத்திற்கு உங்களை உரிமையுடன் அழைக்கிறேன் அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு என அனைத்திலும் இந்திய அரசு இலங்கையைப் புறக்கணிக்கக் கோரும் நம் கோரிக்கை தமிழக மக்கள் கோரிக்கையாக மாற வேண்டும். மாறச் செய்ய வேண்டும். அதற்கு நரேந்திர மோதியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் துணை செய்யும் என்று தமிழ்த்தேசியவிடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர்
வே.பாரதி அழைப்பு விடுத்திருந்தார், இதன்படி,
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம், தோழர் தியாகு தலைமையில் 13.03.2015 காலை நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள் அமைப்புகளை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று கைதாகினர்.

Leave a Response