உள்ளூரிலேயே வழிய காணோம்.. இதுல இங்கிலீஷ் படம் வேறயா என தயவு செய்து வாய் புளித்ததோ, இல்லை மாங்காய் புளித்ததோ என பேசிவிடவேண்டாம். காரணம் சிம்பு எது செய்தாலும் அதில் ஓர் அர்த்தம் (!?) இருக்கத்தான் செய்யும்.. அந்தவகையில் சிம்பு தான் ஆங்கிலத்தில் இயக்குவதாக சொன்ன படம் இன்னும் ஏன் தாமதமாகிக்கொண்டே போகிறது என ஒரு பேச்சு ஓடிக்கொண்டே இருக்கிறது.
இன்னும் சிலர் மணிரத்னம் படத்தில் நடிக்கப்போவதால் இந்தப்படம் ட்ராப் ஆகிவிடும்.. அவ்வளவுதான் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.. ஆனால் இந்தப்படம் நிச்சயமாக படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட இருக்கிறது. தாமதத்திற்கு காரணம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் கௌதம் மேனனும் தான். ஆம்.. சிம்பு படத்தில் பணியாற்ற போகும் சந்தோஷ் சிவன், இயக்குனர் ஏ.ஆர்.முருகாதாஸுடன் இணைந்து ‘ஸ்பைடர்’ படத்தில் பிசியாக இருந்தார். இப்போது பிரீயாகி விட்டார்.
அதேபோல இந்தப்படத்தின் வசனங்களை எழுதித்தரவேண்டிய கௌதம் மேனன், இப்போதுதான் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். அதை முடித்தவுடன் சிம்பு படத்திற்குள் இவர்கள் இருவரும் நுழைகிறார்கள்.. படப்பிடிப்பு அக்டோபரில் துவங்க இருக்கிறதாம்.