கார்த்தி பின்வாங்கியது ஏன்..?


ஓடுகிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.. ஆனால் தீபாவளிக்கு தனது படம் ரிலீசாவதை ஒரு சென்டிமென்ட்டாக வைத்திருக்கிறார் கார்த்தி. கடந்த வருடம் கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ படமும் தீபாவளி தினத்தில் தான் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் ; அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி..

இந்தப்படத்தை வரும் தீபாவளி ரிலீசாக வெளியிடுவதாக ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை நவ-17க்கு மாற்றி வைத்து அறிவிப்பு செய்துள்ளார்கள்.. விஜய்யின் ‘மெர்சல்’ உடபட் இன்னும் ஒன்றிரண்டு படங்கள் தீபாவளிக்கு வர இருப்பதால் எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்காது என்பதால் தான் இந்த மாற்றம் என சொல்லப்படுகிறது.

ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்துள்ளார் கார்த்தி. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஹீரோவுக்கு செம டப் கொடுக்கும் வில்லனாக மிரட்டிய அபிமன்யு சிங் நடிக்கிறார்..

Leave a Response