
நடிப்பில் பிசியாக இருந்தாலும் ஒரு தயாரிப்பாளராகவும் மாறியுள்ள விஜய்சேதுபதி விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதைதொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப்படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்கு பிறகு யோகி பாபு, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட இருக்கிறது.
அந்தவகையில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டுமாம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படமும் இதுதான். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கும் ரிஸ்க்கை எடுத்துள்ளாராம்


