எமன் படத்தைத் தொடர்ந்து தற்போது அண்ணாதுரை, காளி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவாகும் அண்ணாதுரை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கும் இந்தப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி, அண்ணாதுரை படத்துக்கு இசையமைப்பதோடு, இப்படத்தில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அண்ணாதுரை படத்தை இந்திரசேனா என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். நேரடி தெலுங்குப்படம் போல் வெளியிடும் திட்டத்தில், இந்திரசேனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து வெளியிட்டுள்ளனர். அண்ணாதுரை படத்தின் தயாரிப்பாளர் ராதிகா என்பதும், சிரஞ்சீவி ராதிகாவின் நண்பர் என்பதால் அவரை வைத்து இந்திரசேனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வைத்துள்ளனர்.