
விவேகம் படத்துக்குப் பிறகு அஜித் ரசிகர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறதென்கிறார்கள். உடனடியாக அஜித் சில விஷயங்களை நிறுத்துவது நல்லது. அவருக்கு.
1. கூலிங் கிளாஸ்.
2. சால்ட் அண்ட் பெப்பர்
3. நடப்பது.
4. சுடுவது.
5, பைக் சேஸிங் காட்சி.
6. முதுகில் குத்துப்படுவது.
7. எரிக்க எரிக்க எழுந்து வருவது.
8. ஸ்லோ மாடுலேஷன் டயலாக் டெலிவரி.
9. வில்லனால் / அல்லக்கைகளால் புகழப்படுவது.
மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அஜித் செய்தபோது ரசித்தோம். ஆனால் அதையே செய்துக்கொண்டிருந்தால்… ருசிக்காக இரண்டு இட்லி கூடுதலாக சாப்பிடலாம். ஐம்பத்தி ஏழு கிலோ இட்லியெல்லாம் முடியாது ! அஜித்தின் சில முந்தைய படங்களில் இதேபோன்ற காட்சிகள் வந்தால் கூட அதையும் மீறி ஒரு ரசிகனாக அக்காட்சிகள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும். இப்போது அந்நிலை கடந்தாயிற்று. ஆங்கிலத்தில் கூஸ்பம்ஸ் என்பார்களே அது ஒட்டுமொத்த விவேகத்தில் ஒருமுறை கூட எனக்குத் தோன்றவில்லை. எனக்குள் இருக்கும் அஜித் ரசிகன் கொஞ்ச கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறான். ஒரேயொரு ஆறுதல். முன்பெல்லாம் அஜித் படங்கள் என்றாலே துணை கதாபாத்திரங்கள் எல்லாம் ‘தல’ என்ற வார்த்தையை வைத்து எத்தனை விதமான வாக்கியங்கள் அமைக்கலாம் என்ற சொல் விளையாட்டை விளையாடுவார்கள்.


