சந்தானத்தை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் ராஜேஷ்..!


யாரும் எதிர்பார்த்திராத, வித்தியாசமான கதைக்களத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் கோடம்பாக்கத்தினர் மத்தியில், சாஃப்டான, அதே சமயம் காமெடி படங்களை மட்டுமே இயக்கி வருபவர் ராஜேஷ். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என இவரது காமெடி தர்பார்கள் எல்லாமே ஹிட் ரகம்.

ஆனால் அதற்குப்பின் அவரது டைரக்சனில் வந்த படங்கள் எல்லாம் வரிசையாக தோல்வியை தழுவின.. அதற்கு சந்தானமும் ஒரு காரணம் என கூறலாம். ஆம்.. ராஜேஷின் படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது சந்தனத்தின் காமெடி என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அதேபோல ராஜேஷ் படங்களில் நடித்ததன் மூலம் சந்தானமும் தன்னை நன்கு வளர்த்துக்கொண்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்தநிலையில் சந்தானம் ஹீரோவாக நடிக்க போய்விட்டதால், ராஜேஷின் படங்கள் ரசிகர்களிடம் எடுபடவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.. இந்தநிலையில் ராஜேஷுக்கு கைகொடுக்கும் விதாமாக அவரது டைரக்சனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சந்தானம். ஆனால் காமெடியனாக இல்லை. ஹீரோவாக.. இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Response