
தீபாவளி ரிலீஸ் என்றாலே பெரிய நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டுமே ரிலீசாவது வழக்கம்.. ஆனால் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள ‘ஹர ஹர மகாதேவகி’ என்கிற படம் தீபாவளி ரேசில் கலந்துகொள்கிறதாம். தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் தயாரித்துள்ள இந்தப்படத்தின் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது தான் இந்த தைரியமான முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இதில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ டைரக்டர் சரவணின் உதவி இயக்குநர் ஆவார்.


