மெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய்


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பெரிய அளவில் நடக்கிறது.
விழாவில் பேசிய படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர் அனல்அரசு பேசும்போது, விஜய் சாரோடு நான்கைந்து படங்கள் செய்திருக்கிறேன்.
இந்தப்படத்தில் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். ஏனெனில், இந்தப்படத்தில் ஒன்றல்ல மூன்று தளபதிகள் என்றார். இதிலிருந்து இந்தப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது வெளிப்பட்டுள்ளது. அவற்றில். ஒரு வேடம் மேஜிக் நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response