
படப்பிடிப்பு தளத்தில் மட்டுமன்றி டப்பிங், மிக்ஸிங் உள்ளிட்ட பணிகளுக்கு இடையே காமெடியை மெருக்கேற்றுவது நகைச்சுவை நடிகர் சூரியின் பாணி. இப்போது சில நண்பர்கள் அவரது காமெடி காட்சிகளுக்கு உதவுகிறார்கள். “என் காமெடிக்கு முன்னோடி என்றால் எங்கப்பா தான். அவரின் காமெடியில் இன்னும் 10 சதவீதத்தை கூட நான் சினிமாவில் செய்யவில்லை. அவர் அப்படியொரு காமெடி மன்னன்” என நெகிழ்வுடன் குறிப்பிடுகிறார் சூரி..
.
சினிமாவுக்கு வந்த காலத்தில் பசி கடுமையாக இருக்கும், பணம் இருக்காது. இப்போது ஆண்டவன் புண்ணியத்தில் பணம் இருக்கிறது. ஆனால், இஷ்டப்பட்டதை சாப்பிட முடியவில்லை. ஏனென்றால் ஒரு நடிகருக்கு உடம்பு மிகவும் முக்கியம். உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு நாயகனுக்கு நண்பனாக நடிக்க முடியும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோபாக வைத்திருக்கிறேன்.” என தான் உடல் மெலிந்து ஸ்லிம்மாக இருப்பதற்கு காரணமும் கூறியுள்ளார் சூரி.
,


