ஓவியாவுக்கு ஆறுதலாக இருக்கும் பிரபல நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடுமையான மன உளைச்சல் காரணமாக வெளியேறிய நடிகை ஓவியா தற்போது அவரது உற்ற தோழியான நடிகை ரம்யா நம்பீசனின் அரவணைப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரவ்வுடனான மனக்கசப்பு, எஞ்சிய பங்கேற்பாளர்களால் காயப்படுத்தப்பட்டது உள்ளிட்டவற்றால் கடும் மன உளைச்சலில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் நடிகை ஓவியா.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் தமது தந்தையைப் பார்த்து பேசிவிட்டு உடனடியாக கேரளா கிளம்பியுள்ளாராம் ஓவியா. கேரளா சினிமா நடிகைகளில் இளம் நடிகைகளுக்கு உற்ற தோழியாக இருந்து வருபவர் பீட்சா படம் புகழ் நடிகை ரம்யா நம்பீசன்.

சமீபத்தில் மலையாள நடிகை ஒருவர் வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான போதும், ரம்யா நம்பீசன்தான் அவர்கூடவே இருந்து ஆறுதல் அளித்தார்.

தற்போது கடுமையான மன உளைச்சலில் இருக்கும் ஓவியாவும், ரம்யாவின் அரவணைப்பில்தான் இருக்கிறாராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிந்து மாதவியின் என்ட்ரியின்போது, ஓவியா டார்லிங்… நீதான் பெஸ்ட். காயத்ரி ஒரு பச்சோந்தி என்று காயத்ரிக்கு எதிராகவும் ஓவியாவுக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்தவர் ரம்யா நம்பீசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response