அஜித்துக்கு சிலை ; இயக்குனர் சிவா சொல்வது என்ன..?


ரசிகர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்கள் யாராக இருந்தாலும் சரி, படத்தை பார்த்து அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தில் ரொம்பவே கண்டிப்பாக இருப்பவர் அஜித். ஆனால் கட் அவுட், போஸ்டர், கோடி, தோரணம், பாலாபிஷேகம் என ஒருபக்கம் அவரது ரசிகர்களில் சிலர் எதையாவது செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அஜீத்துக்கு சிலை வைப்பது குறித்த செய்திகள் இணையதளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. நெல்லையில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிலையுடன் நூலகமும், கும்பகோணத்தில் ரூ.1 லட்சம் செலவில் சிலையும் அவரது ரசிகர்கள் வைக்கப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றனவாம்.

அஜித் இதை விரும்புகிறாரா..? இதற்கு அவரிடமிருந்து எந்த ரியாக்சனும் இல்லையே என அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் இதுபற்றி கேட்டால், ‘மனிதர்களுக்கு சிலை வைப்பதெல்லாம் அஜித்துக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவர் அடிக்கடி சொல்வது அம்மா, அப்பா, செய்யும் தொழில் இதை மூன்றையும் கவனமாக பார்த்து கொள் என்பார். இதைவிட்டு அவருக்க சிலை வைப்பதை அவர் கண்டிப்பாக விரும்ப மாட்டார்’’ என்று கூறினார். அப்புறம் எதுக்கு இந்த ஆட்டம் போடுறாங்க..?

Leave a Response