சர்வதேசப் போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி – ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி

தமிழீழ உதைபந்தாட்ட அணி டென்மார்க்கில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவின் 4ஆவது மிகப் பெரிய சர்வதேசப்போட்டியான Vildbjerg cup-ல் களமிறங்கியுள்ளது.

3.08.17 முதல் தொடங்கி 06 .08.17 வரை டென்மார்க்கில் Vildbjerg cup நடைபெற உள்ளது.

இதில் பலநூற்றுக்கணக்கான ஐரோப்பாவில் உள்ள ஆண்கள், பெண்கள்அணிகள் போட்டியிடுகின்றன.
இப்போட்டியில் நான்காவது தடவையாக தமிழீழ அணியும் களம் இறங்குகின்றது. இச் சுற்றுப்போட்டியில் 16 வயதிற்கு உட்பட்டோர் பங்குபற்ற உள்ளனர்.

குறிப்பு:

அடுத்த வருடம் இலண்டனில் நடைபெறவிருக்கின்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையேயான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தமிழீழ உதைப்பந்தாட்ட அணி தேர்வு பெற்றுள்ளது. அந்த அணிக்காக விளையாட டென்மார்க்கில் இருந்து சில தமிழீழ வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அரசியல் அரங்கில் தமிழீழம் என்பதை ஆழப்பதித்திருக்கிறோம். இப்போது சர்வதேச விளையாட்டு அரங்கிலும் எமது புலிக்கொடி பறக்கிறது என்று தமிழீழ ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Leave a Response