கவிஞர் காசி ஆனந்தன் இப்படிச் செய்யலாமா? – தமிழீழ ஆதரவாளர்கள் வேதனை

தமிழகத்தில் இந்து மக்கள் கட்சியோடு இணைந்து செயல்படும் கவிஞர் காசி ஆனந்தனுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூகவலைதளங்களில் அவரைப் பற்றிப் பகிரப்படுகிற கருத்துகள் இங்கே…

சிங்கள இனவெறி அரசின் ஒடுக்குமுறை தகர்த்து சுதந்திரத் தமிழீழம் அமைக்க சிறீலங்கா அரசை எதிர்த்து, ஆயுதம் தாங்கி
போராடும் மக்கள் எமது இனம் என்ற உணர்வின் காரணமாகவே தமிழ்நாட்டு மக்கள்கிளர்ந்தெழுந்தனர்.

தமிழீழமக்களுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட வேண்டியும், போராளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்பதை மையம்கொண்டே தமிழகத் தமிழர்கள் போராட்டங்களில் இறங்கினர்.தமிழின தேசிய உணர்வு
சுடர்விட்ட மக்கள் திரள் போராட்டங்களை ஒடுக்க மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைக்கு 18 பேர் தீக்குளித்து பலியாகினர்.

ஆயிரக்கணக்கான இன உணர்வாளர்கள்,ஏழை எளிய தமிழ்மக்கள் வழக்குகள்,சிறைஅடைப்பு என பல வழிகளில் துன்பங்களை
ஏற்றுள்ளனர்.இந்த தியாகங்களை,துன்பங்களை இன்று வரை தமிழ்நாட்டுமக்கள்எதற்காக ஏற்றனர்?

இன உணர்வு…இன உணர்வு என்பதைத்தவிர வேறில்லை.

தமிழீழ ஆதரவாளர்களாய் திரண்டோரில்எவரும் சாதி பார்க்கவில்லை.மத அடையாளங்களைத் தேடவில்லை. இஸ்லாமியராய்
வெளிப்படுத்தவில்லை.இந்துக்கள் எனக்கூவி குரல் கொடுக்கவில்லை.அனைவரும்தமிழர்களாகவே திரண்டெழுந்தோம்.இன்றும் தமிழீழ மக்களுக்கான உரிமைப்போர்க்கனல் அணையாது உள்ளது தமிழகத்தில்!

இந்த நிலையில், மத்தியில் அமைந்துள்ள மதவாத பாஜகவும்,அதன்தொங்கு சதையாக ஆகிவிட்ட மாநில அரசும் எந்த ஒரு உரிமைப்போராட்டத்தையும்கடுமையானஅடக்குமுறை சட்டங்களின் மூலம் ஒடுக்கி செயல்பாட்டாளர்களை சிறையிலடைத்து வருகிறது.

தமிழீழ மக்களுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சிக்காககுண்டர் சட்டம் ஏவி விடப்பட்டு உள்ளது மிகக் கேவலமான நடவடிக்கையாக! முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள்,இந்திய-இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டு 30 ஆண்டுகள்..ஆகிவிட்டன.

தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அமளிப் படையை அனுப்பி சீர்குலைத்தும்,இறுதிப் போரில் பன்னாட்டு அரசுகளோடு
கை கோர்த்து ஒடுக்கியும் ஒட்டு மொத்த தமிழர்களின் வெறுப்பிற்கும் ஆளாகி நிற்கிறது இந்தியா!

இந்த நிலையில், மத்தியில் அமைந்து உள்ள மதவாத பாஜகவின் அனுசரணையை பெற்று, கொக்கு தலையில் வெண்ணை வைத்து, தமிழீழத்தில் இந்துக்கள் அழிக்கப்படுகிறார்கள் எனக்கூவி,இந்துக்களுக்கான தமிழீழம் அமைக்க இந்தியா உதவும் எனபகல் கனவு கண்டு,தமிழ்நாட்டில் உள்ள மதவாத-பாஜக வின்-கை கூலியாகமாறி,தமிழின உணர்வாளர்கள் இடையே ஊடுருவத் துடிக்கின்றார் காசி ஆனந்தன்.

தங்கள் மண்ணுக்காக போராடிய அனைத்து மதச்சார்பற்ற அமைப்புகளையும், பாதிக்கப்பட்ட இன உணர்வாளர்களையும் அவமதிக்கின்ற வகையில் இன்றுமதவெறிஅமைப்புகளோடு கூடிக் குலாவுகிறார்.

ஒரு புதிய விடுதலைத் தத்துவத்தைக் கற்பித்துக் கொண்டு தமிழ்நாட்டில் ‘கம்பு’ சுத்தும் வேலை எல்லாம் வேண்டாம்.அது எடுபடாது.

Leave a Response