மிகப்பெரிய போட்டியை சமாளிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்..!


மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் தான் ‘வேலைக்காரன்’. இந்தப்படத்தை ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடவிருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்தையும் ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று இப்போது ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் இருவரையும் வைத்து பாலா இயக்கும் நாச்சியார் படமும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால், வேலைக்காரன் படத்துக்கு 300 தியேட்டர்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, இந்த இரண்டு படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

Leave a Response