ஜெ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- எடப்பாடிக்கு மு. களஞ்சியம் கோரிக்கை


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு,குற்றம் நிரூபிக்கப்படாமல் கடந்த 26- ஆறு ஆண்டுகளாக சிறையில் வாடுகிற அண்ணன் பேரறிவாளன் அவர்களை வேலூர் மத்திய சிறையில் 20-06-2017 அன்று இயக்குநர் மு.களஞ்சியம் சந்தித்தார். அது பற்றிய அவரது குறிப்பு……
சிறைச்சாலைக்குள் சென்று அண்ணனை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன்.காரணம் ஆள் மூன்றில் ஒரு பங்காக உடைந்து போயி இருந்தார்.”என்னச்சு அண்ணா என்று பதட்டமாக கேட்டேன்.உடல் நிலை சரியில்லாத போது உடம்பு இளைத்துவிட்டது.பிறகு சரியான பிறகு 71-கிலோவை மெயின்டைன் பண்ணுறேன்”என்றார். உண்மை அதுவல்ல…மரணதண்டனை ரத்தான பிறகு இந்தா விடுதலை அந்தா விடுதலை என்று சொல்லி வருடக்கணக்கில் சிறையில் கிடப்பது ஒரு வித சோர்வை உண்டாகி இருக்கிறது.பரோலில் கூட விட முடியாத அளவுக்கு மத்திய மாநில அரசுகள் ஏழு தமிழர்களை முடக்கி வைத்துள்ளது.அண்ணனோடு பேசிக்கொண்டிருந்த பொது என்னையும் அறியாமல் கண் கலங்குகிறேன்.அருகில் இருக்கிற பழ.திருமுருகனோ அழுது கொண்டிருக்கிறார்.கிட்டத்தட்ட கலங்கிப்போய் இருக்கிறார் வழக்கறிஞர் திருமுருகனும்,வெற்றிமாறனும் .எங்களின் நெஞ்சை கசக்கி பிழிகிறது அவ்வளவு சோகம்.சந்திப்பு முடிந்து அனைவரும் வெளியே வந்தோம்.எங்களது அடையாள அட்டையை கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்டு திரும்புகிறோம்.அண்ணன் பேரறிவாளன் அவர்கள் தூரத்தில் எங்களை பார்த்த படியே நிற்கிறார்.எங்கள் கண்கள் உடைவதை யாராலும் தடுக்க முடியவில்லை.அவரை விட்டு விட்டு வர இயலவில்லை.சிறைக் காவலர்களோ விரட்டுகிறார்கள்.நிலைகுலைந்து சிறையை விட்டு வெளியே வந்தோம்.எப்படியாவது அண்ணனை வெளிக்கொண்டு வந்து விட வேண்டும் என்கிற வைராக்கியம் நெஞ்சில் உண்டானது.

தமிழர் நலம் பேரியக்கத்தில் சார்பில் நடந்த சந்திப்பில் என்னோடு வழக்கறிஞர் தீரன் திருமுருகன்,தோழர் பூதலூர் தமிழ்ச்செல்வன், தோழர் .நெடுவை.பழ.திருமுருகன், தோழர்.வெற்றிமாறன்.தோழர் ரமேஷ் ஆகியோர் வந்திருந்தனர்.கிட்ட தட்ட ஒரு மணிநேரம் அண்ணன் பேரறிவாளன் அவர்களோடு கலந்து ஆலோசித்துவிட்டு வந்தோம்.

பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து
தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் மூன்று விடயங்களை மத்திய மாநில அரசுகளுக்கு ந்கொரிக்கையாக வைத்தோம்.

1.18-02-2014 அன்று உச்சநீதிமன்றம் மூன்று தமிழர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்தது.அடுத்த நாள் 19-02-2014 அன்று தமிழத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எழுதமிழர்களை விடுவிப்பதாக சட்டசபையிலே அறிவித்தார்.
வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு பிரிவு விசாரித்ததால் மத்திய அரசினை கலந்து ஆலோசித்து விடுவிக்க வேண்டும் என்பதால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
செல்வி ஜெயலலிதா அவர்களை பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் அவர்கள் சந்தித்த பொது அவரின் கரங்களை பற்றிக்கொண்டு ”அழாதிங்க அதான் உங்க மகனை நான் விடுவிக்க போகிறேனே”என்றார்.
அவர் கொடுத்த அந்த வாக்குறுதி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.ஆளுகிற அரசு உண்மையான அம்மாவின் அரசாக இருந்தால் முதல் வேலையாக எழுதமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.அதற்கான அழுத்தத்தினை நடுவண் அரசுக்கு மாநில அரசு ஏற்படுத்த வேண்டும்.ஏனெனில் இந்த வாக்குறுதிதான் ஜெயலலிதா அம்மாவின் கடைசி வாக்குறுதி.அதை நிறைவேற்றினால் மட்டுமே அந்த அம்மாவின் ஆன்மா சாந்தியடையும்.

2.உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஏழு தமிழர்களின் விடுதலைக் குறித்து ஆய்வு செய்து வருகிறது.கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் சிக்கி கிடக்கிறது.மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அந்த ஆய்வை வேகப்படுத்தி,தீர்ப்பினை வழங்க செய்ய வேண்டும்.ஏனெனில் அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.ஆகவே மூவர் பெஞ்சின் தீர்ப்பு முக்கியமாகிறது.அந்த தீர்ப்பு எதிரான தீர்ப்பாக இருந்தாலும் கவலை இல்லை.

3.அய்யா குயில்தாசன் அவர்கள் மிக மோசமான நிலையில் உடல் நலமின்றி சொந்த கிராமத்தில் கிடக்கிறார்.அவரை பார்ப்பதற்கு அண்ணன் பேரறிவாளன் அவர்களுக்கு பரோல் அளிக்க வேண்டும்.பரோல் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் நடக்கிற செயல்.ஆகவே மாநில அரசு உடனே தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் அவர்களுக்கு பரோல் கொடுக்க வேண்டும்.
என்கிற மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
-மு.களஞ்சியம்.

Leave a Response