கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தான் ‘புலி முருகன்’.. மலையாள சினிமாவில் முதன்முதலாக 100 கோடி ரோப்பாய் என்கிற வசூலை எட்டியதோடு சுமார் 150 கோடி ரூபாயை வசூலித்து சாதனை செய்தது.. மனிதனை வேட்டையாட்டும் புலி, அதனை வேட்டையாடி மனிதர்களை காப்பாற்றும் முருகன் என்கிற யுனிவர்சல் கதைக்களத்தில் இந்தப்படம் வெளியானது.
இந்தப்படம் தற்போது தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2டி மற்றும் 3டி என இரண்டுவிதமாக மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. அனைத்து தரப்பினரையும் குறிப்பாக குழந்தைகளை கூட கவரக்கூடிய அம்சம் இந்தப்படத்தில் இருப்பதால் தமிழில் ‘புலி மருகன்’ வசூல் சாதனை படைக்கும் என்பது உறுதி.
மேலும் இந்தப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிகமான கமாலினி முகர்ஜி, லால், கிஷோர், ஜெகபதிபாபு, ‘அன்பு’ பாலா, நமீதா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். வைசாக் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.