
விவசாயிகள் 5 பேரை சுட்டுக்கொன்ற ம.பி.பாஜக.அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
மத்தியப்பிரதேசத்தில் பாஜக அரசு நடந்து
வருகிறது. விவசாயிகள் கடன்சுமையாலும்
கட்டுபடியான விலை கிடைக்காமலும் அல்லலுற்று வருகின்றனர்.
விவசாயிகள் கட்டுபடியான விலை,
கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளை
முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிவராஜ்சிங்சௌகான் அரசு விவசாயிகளை மதித்து அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கத்தவறிவிட்டது.அதிகாரிகளை வைத்துப் பேசி ஏமாற்றம் செயதுள்ளது.
ம.பி.பாஜக அரசின் அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்சௌர் மாவட்டத்தில் 144தடையுத்திரவை மீறி விவசாயிகள் கொதித்தெழுந்து போராடியுள்ளனர்.வாகனங்களை மறித்துள்ளனர்.போலீஸ் விவசயிகள மீது
கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
விவசாயிகள் போலீஸாரின் தாக்குதலைக்
கண்டு அஞ்சி ஓடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர்.
பிப்லியாமண்டி காவல் நிலைய எல்லைப்
பகுதியில் துப்பாக்கிசூடு நடத்தி போலீஸார்
கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
இதில் 5விவசாயிகள் உயிர் பறிபோயுள்ளது.
பல விவசாயிகளுக்கு கடுமையான குண்டுக்
காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மாண்ட விவசாயிகளின் பெயர்கள்
1)கன்கயலால் பட்டிடார் 2) பாப்லூபட்டிடார்
3)செயின்ராம்பட்டிடார் 4)பிரேம்சிங்
5 ஆவது நபரின் பெயர் விபரம் தெரியவில்லை.
இதே போன்ற போராட்டம் பாஜக ஆளும் மகராஸ்ட்டிரா மாநிலத்திலும் நடந்து
வருகிறது.பூனா விவசாயிகள் உற்பத்தி
விற்பனைச் சங்கத்திற்கு 50% மேல் காய்கறிகள் வரவில்லை.
பிரதமர் மோடியைச் சந்தித்து தேசியவாத
காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விவசாயிகளின் பிரச்சனைகளை தலையிட்டுத் தீர்க்கக் கோரியுள்ளார் விவசயிகளின் பிரச்சனை மாநிலப்பொறுப்பு
அதில் மத்திய அரசு தலையிடாது என பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
மாடு விற்பனையைத்தடுத்து விவசாயிகளின் கால்நடைத் தொழிலை அழிக்கும் மத்திய அரசு துப்பாக்கிச் சூடுநடந்தபின்னும் வாய் திறக்காமல் உள்ளது மிகவும்
வேதனையளிக்கும் செயலாகும்.
பாஜக ஆளும் மாநில விவசயிகளின்
பிரச்சனையைத் தீர்க்காமல் கண்மூடித்தனமாக சுட்டுப்பொசுக்குது
வன்மையான கண்டனத்திற்குரியது.
தற்சார்பு விவசாயிகள் சங்கம்.
07-06-2017


