வரலாற்று படமாக உருவாகும் ‘சங்கமித்ரா’ கதை இதுதான்..!


தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘சங்கமித்ரா’ இயக்குநர் சுந்தர்.சியின் இன்னொரு பக்கத்தை காட்டுவதாக அமையவுள்ளது. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கூட்ட்டனியில் இணைந்துள்ளார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க இருப்பவர்களுக்காக படக்குழுவினர், படத்தைப் பற்றிய அறிமுகம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.

அதில் ‘சங்கமித்ரா’ பற்றி படக்குழுவினர் என்ன்ன சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா..? “சங்கமித்ரா 8-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி. அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும், துயரங்களுமே இந்தக் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், பல்வேறு உறவுகளைப் பற்றிய இந்தக் கதை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது” என சங்கமித்ராவின் கதை பற்றி கோடிட்டு காட்டியுள்ளார்கள்.

Leave a Response