கோவா, மணிப்பூரில் கொல்லைப்புற வழியாக செல்லும் பாஜக


கோவாவில் 40 உறுப்பினரில் 18 பேர் உள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்காமல் 13 பேர் உள்ள பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. எத்தனை ஜனநாயக கொடுமை!!! இதிலும் கொடுமையானது மணிப்பூர் 60 இல் 28 பேர் இருந்தும் 21 பேர் உள்ள பா.ஜ.க.ஆட்சி அமைக்கிறது? உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய இரு மாநிலங்களில் வெற்றி பெற்ற போதும் அதிகாரவெறி அடங்காமல் மத்திய அதிகாரத்தைப் பயன்படுத்தி கொல்லைப்புற வழியாக கோவாவிலும் மணிப்பூரிலும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் நான்கில் நாங்கள் ஆட்சியமைக்கிறோம் என்று பெருமை பேசுவதற்காகவே இந்த சனநாயக்கொலை செய்கிறது பாஜக. இது நீடிக்காது என்றாலும் பாஜகவின் அதிகார வெறியைப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.

Leave a Response