கொந்தளிக்கும் கொங்கு மண்டலம் பவானியில் தடுப்பணை கட்டாதே! காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! எனும் முழக்கங்களோடு பல்லாயிரக்கணக்கானோர் கேரள எல்லையில் இன்று(12.03.2017)காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது,
1) சாலை முற்றாக 4 மணி நேரம் மறிக்கப்
பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டது.
2) பாசனப் பயனாளிகள் மிக அதிகமுள்ள
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்திலிருந்து 4000/ அதிகமான விவசாயிகள் குடும்பமாக பங்கேற்றனர் விவசாயத் தொழிலாளர்களும் கணிசமாக இருந்தனர்.மொத்த எண்ணிக்கை பத்தாயிரம் இருக்கும்.
3)தடுப்பணை தடுப்புக்குழு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பயனாளிகளையும் இணைத்தது.
4) குழுவின் மூன்று முழக்கங்கள் மட்டுமே
பிரச்சாரம் செய்யப்பட்டது
அ) தமிழக அரசு தடையாணை பெறவேண்டும்
ஆ) மத்திய அரசு காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைத்து இந்த நதி நீர்ச்சிக்கலைத் தீர்க்க வேண்டும்.
இ) கேரள அரசு நடுவர் மன்றத் தீர்ப்பின்படி அணைகள் கட்டுவது சட்டவிரோதம் எனவே கை விடவேண்டும்.
இந்தப் போராட்டத்திற்கு அரசியல் சாயம்
பூச சிலர் முயன்றனர்.ஆனால் அது பொய்யாக்கப்பட்டு விட்டது.
பேராசிரியர் ஜவகிருல்லா அவர்கள்
தியாகி ஈஸ்வரனை நினவு கூர்ந்து
பேசியது மிகச் சிறப்பானது.
இந்தப் போராட்டத்தின் நீட்சியாக
பவானி பெயரல்ல, எங்கள் உயிர்!
என்ற முழக்கத்துடன் மார்ச்15 லிருந்து
மக்கள் இயக்கமாக மாறும்
சூழல் உருவாகி உள்ளது.
அதில் கட்சிக் கொடிகள், மற்றும் இதர
அடையாளங்கள் இல்லாத மக்கள் இயக்கமாக அது நடைபெரும்.